Uploaded by tjayabalasin

Villu Pattu -2023( Theepavili)

advertisement
வில்லு பாட்டு
தந்தனத்தோம் என்று சொல்லியே…. வில்லினில் பாட… ஆமா…. வில்லினில்
பாட…. வந்தருள்வாய் கணபதியே….
தந்தனத்தோம் என்று சொல்லியே…. வில்லினில் பாட… ஆமா…. வில்லினில்
பாட…. வந்தருள்வாய் கணபதியே….
தேவா: தலைவரே இறைவணக்கம் சொல்லிற்றம் இனி அடுத்து யாருக்கு
வணக்கம் சொல்லப்போறம்?
தலைவர் : காலங்காத்தால ஆறு மணிக்கு .... கோழி கொக்கரக்கோனு
கூவையில (இருமல்1 )
காலங்காத்தால ஆறு மணிக்கு.... கோழி கொக்கரக்கோனு கூவையில ...
(இருமல்2 )
கதை சொல்லேக்க silent ஆஹ் கேக்கணும் !!!
காலங்காத்தால ஆறு மணிக்கு.... கோழி கொக்கரக்கோனு கூவையில ... MUN
சென்று...... விழுந்து விழுந்து படித்து..... மாலையிலே எம்மை பார்க்க
வந்திருக்கும் எனதருமை சகோதர சகோதிரிகளே….. (pause)
காண்டீபன்: குளிர் எண்டும் பராம…. மழை எண்டும் பாராம… இங்கே வந்து
கலந்து கொண்டு இருக்கும் என் அருமை உறவுகளே… உங்கள்
அனைவருக்கும்….. (pause)
அனைவரும்:
வந்தனங்கள் செய்து மகிழ்ந்தோம்... ஆமா... வந்தனங்கள் செய்து மகிழ்ந்தோம்...
உன்னருள் தந்து வாழ்த்த வேண்டும் கலைமகளே.....
வந்தனங்கள் செய்து மகிழ்ந்தோம்.... உன்னருள் தந்து வாழ்த்த வேண்டும்
கலைமகளே.....
அஹ்ஹா ஆமப்போய்…!!!
அஹ்ஹா ஆமப்போய்…!!!
துஷாந்த்: எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்....
தலைவர் : தொடங்க முதலே என்னடா?
துஷாந்த்: sundaylila எதுக்கு university போகணும் ?
தலைவர் : கனக்க யோசிக்காம நிகழ்ச்சியை தொடங்குவம் தம்பிமாறே
காண்டீபன்: சரி....என்ன இண்டைக்கு எல்லோரும் வடிவு
வெளிக்கிட்டு வந்திருக்கினம் , என்ன விசேசமாம்?
வடிவாய்
பியோமினன்: big screen la Leo படம் பாக்க போயினமோ…. !
அனந்தி : இஞ்ச பாருங்க அவவ! நல்ல வடிவா வெளிக்கிட்டு வந்திருக்கிறா….
சுஷ்மிதா: எவ அவ.....?
அனந்தி : Spot a person in Group!அவாதான் உங்க இருக்கா….!!
சுஷ்மிதா:ஒஹ்ஹஹ் அவாவா
தேவா : அப்ப என்னப்பன்(துஸாந்த்) கலியாணம் ஏதுமோ?
துஸாந்த்: இஞ்ச உங்களுக்கு ஒண்டும் தெரியாது. ஒரே பகிடிதான், இண்டைக்கு
தீபாவளி பாருங்கோ….!!
பியோமினன்: தலைவரே நாங்கள் ஏன் தீபாவளி கொண்டாடுறனாங்கள்?
அனைவரும் : ஆமா.... ஏன்?????
பாட்டு- அனைவரும் : தாவணி போட்ட தீபாவளி( lyrics)
தாவணி போட்ட தீபாவளி
வந்தது என் வட்டுக்கு
ீ
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு
கண்ணா கண்ணா மூச்சு
என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு
இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய
கணக்கு புரியல
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது
அவள கண்டாலே
கொட்டுதுகொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு
பொழச்சு போறான் ஆம்பள.
காண்டீபன்: சரி சரி பாட்டை நிறுத்துங்கோ..
சுஷ்மிதா: இவையல் எங்க basement க்கு போய் வந்தவாயா? ஒரே
பாட்டக்கிடக்கு?....
அனந்தி: ஓமோம் இதுல போத்தல் இருந்தது கண்டனான் .....!!
தேவா : அது நாங்கள் கொண்டுவந்த உற்சாக பாணம்.
தலைவர் : சரி சரி…. சொல்லுங்க பாப்பம் நாங்க ஏன் தீபாபவளி கொண்டாடுறம்
எண்டு?
பியோமினன்: விஜய் படம் ரிலீஸ் அகிறபடியாதான் கொண்டாடுறனாங்க.. என்ன
அண்ணா?
பாட்டு-அனைவரும்:
நா ரெடி தா வரவா
அண்ணன் நா இறங்கி வரவா
தேள் கொடுக்கு
சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும்
என் ரூட்டு மாறதப்பா
நா ரெடி தா வரவா
அண்ணன் நா தனியா வரவா
திறன் நடுங்குற பறை அடிக்கிற
நான் ஆடத்தான்
விரல் இடுக்குல தீ பந்தம்
நா ஏத்த தான்
தலைவர் :நீங்கடா … 90's kids…. படம் பாத்து கெட்டு போனாங்கள்…. கேளுங்கோ
பிள்ளைகளே!!! தீபாவளி வேறு காரணத்துக்காக கொண்டாட படுகிறது.
காண்டீபன்: ராமன் இராவணனை வென்று அயோத்திக்கு திரும்பி வந்ததை
கொண்டாடுவதே...?
பிரவன்:
ீ
அப்படி இல்ல அப்பிடி இல்ல கிருஸ்ணர் நரகாசூரனை வதம் செய்த
நாள்…… மனசிலாயோ....
தேவா : ஜெயிலர் ல முத்துவேல் பாண்டியன் தலையை எடுத்த மாதிரியா ?
காண்டீபன்: பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் முடித்து அஸ்தினாபுரம் வருகை
தந்தையிட்டு கொண்டாடுறதாம்..
தலைவர் :அது மட்டும் இல்ல.... லட்சுமி இன் பிறந்த தினமும்... இந்த நாளில்
தான் கொண்டாடப்படுகிறதாம் ...!
துஸாந்த்: laxmi rai ku போன மாசம் தானே பிறந்தநாள்..!
பிரவன்:
ீ
எனக்கு ஒரு ஊண்மை தெரிந்தாகணும் சாமி!
தலைவருக்கா அல்லது லட்சுமி க்கா பிறந்த நாள்?
சுஷ்மிதா: கார்த்திகையில் தலைவருக்குத்தான் பிறந்தநாள் எண்டு என்டு
ஊருக்கே தெரியும்!
அனந்தி: இளங்கோ அண்ணாக்கு பிறந்த நாளோ?! அவர்தான் ஊரிலயே
இல்லையே…..!
பாட்டு-அனைவரும்:
பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…
மொட்டுத்தான் வந்து…
சொட்டு தேன் தந்து…
கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா…
தலைவர் : பாட்ட விட்டுட்டு நாங்க விசயத்துக்கு வருவம்.
எங்கட தீபாவளி ஆனது… நரகாசூரனை வதம் செய்த நாளைதான் நாம்
தீ்பாவளியென கொண்டாடுகின்றோம்
பிரவன்:
ீ
யார் அந்த நரகாசூரன்?
தலைவர் : அவர் ஒரு அரக்கன்…. அவர் தேவர்களையும் மக்களையும் கொடுமை
செய்தார்.
பிரவன்:
ீ
ஹிட்லர் ஆஹ் விட பயங்கரமானவரோ?
தேவா: என்னன்னே … எங்கட மனிசிமார் செய்ற கொடுமைகளை விட பெரிய
கொடுமைகளோ?
தலைவர் : பொறுங்கோ பொறுங்கோ எங்கள சும்மா வம்பில மாட்டி விடாம வந்த
வேலைய பாப்பம்...
துஸாந்த்:எங்களுக்கு சோறு முக்கியம் பிகிலு !!
காண்டீபன்: நரகாசுரன் பல தீமைகளை செய்தான் அவன் கொடுமை தாங்க
முடியாமல் மக்கள் கிருஸ்ண்ரிடம் முறையிட்டனர்.
சுஷ்மிதா: ஏன் அன்ன அரக்கனை அழிக்க ஏலாம போனதோ ?
தலைவர் : அவன் கடுமையான தவம் செய்து... பிரம்மனிடம் வரம் பெற்றவனாம்.
துஸாந்த்: வரமா ?..... என்ன வரம்?
பிரவன்:
ீ
சுயம்வரமோ ?...
பாட்டு-அனைவரும்:
அவளுக்கென்ன
அம்பாசமுத்திர அய்யர்
ஹோட்டலு ஹல்வா
மாதிரி தாளம்பூவென
தள தளவென வந்தா
வந்தா பாரு
அவனுக்கென
ஆல்வாகுறிச்சி அழகு
தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள
பளவென வந்தான்
வந்தான் பாரு
கும்மி அடி கும்மி
அடி கும்மி அடி ஓஹோ
கொத்து வாழ சத்தம்
போட கும்மி அடி
ஓஹோ ஓஓ
கும்மி அடி கும்மி
அடி கும்மி அடி ஓஹோ
தோட்ட பூவில் வண்டு
ஆட கும்மி அடி ஓஹோ
தலைவர் : என்ன வரம் எண்டா .... அது சாகா வரமடா ...!
தேவா: ஐயோ ஐயோ... ஒரு அணு குண்டு போட்டிருக்கலாம் ….!
தலைவர் : அவனும் அப்பிடித்தான் நினைத்தான்.... ஆனால் உண்மையில் அவன்
பெற்ற வரம்..... தான் சாவதாக இருந்தால் .... தனது தாயான சத்திய
பாமாவினாலேயே இறக்க வேண்டும் என்பதே.
பாட்டு-அனைவரும்:
மக்க கலங்குதப்பா…
மக்க கலங்குதப்பா…
மடி புடிச்சி இழுக்குதப்பா…
நாடு கலங்குதப்பா…
நாடு கலங்குதப்பா…
நாட்டு மக்க தவிக்குதப்பா…
என்னப் பெத்த மகராசா…
நீ என்னப் பெத்த மகராசா…
இந்த ஊரக்காக்கும் ராசா…
நீ என்னப் பெத்த மகராசா…
இந்த ஊரக்காக்கும் ராசா…
காண்டீபன்: சத்தியபாமா மறுபிறப்பு எடுத்து... கிருஷ்ணரின் மனைவியாக வந்து
வதம் செய்தார்....!!
சுஷ்மிதா: அப்ப என்ன அம்மாவே... பிள்ளையை கொண்டாவோ....!??
காண்டீபன்: அது அம்மாவின் மறுபிறவி... அதை அவர் அறிந்திருக்கவில்லை.
நரகாசுரன் இறந்த பின் தான் அதை அவர் அறிந்து கொண்டார் .
பியோமினன்: என்ன இண்டைக்கு தீபாவளி எல்லோ.... ஒரே சோகமா இருக்கு
கதை...!
தலைவர் : தீயவன் அழிந்தால் கொண்டாட்டம்தானே !!!
பாட்டு-அனைவரும்:
ஹே எத்தன சந்தோசம்
தினம் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்தும் கண்ண ீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆளு
ஹே எத்தன சந்தோசம்
தினம் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
நீ சிந்தும் கண்ண ீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆளு
காண்டீபன்: அப்ப என்னப்பா ஒரு நன்றி ஆஹ போட்டு முடிப்பமா!!
பாட்டு-அனைவரும்:
தந்தனத்தோம் என்று சொல்லியே…. அனைவருக்கும் நன்றி கூறி
வாழ்த்துகின்றோம் … ஆமா….
நன்றி கூறி வாழ்த்துகின்றோம் !!
Download